பெட்டாலிங் ஜெயா, நவ 26- தீபகற்ப மலேசியாவில் காலை மணி 9 முதல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21,884 பேராக உயர்வு கண்டுள்ளது. அவர்கள் முறையே 164 வெள்ள நிவாரண மையங்களில் தற்காலிகமாக தங்கியுள்ளதாக ஜே.கே.எம் தெரிவித்தது.
கிளாந்தானில் 3,666 குடும்பங்களைச் சேர்ந்த 9,669 பேர் மாநிலத்தில் உள்ள 53 பி.பி.எஸ் மையங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பேராக் மாநிலத்தில் வெள்ளத்தால் 4,330 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மஞ்சோங், பேராக், தெங்கா, பாகான் டத்தோ, ஹிலிர் பேராக், கோலா கங்சார் பத்தாங் பாடாங் ஆகிய மாவட்டங்களில் உள்ள தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
பகாங் மாநிலத்தில் வெள்ளத்தால் 19 பேரும் திரங்கானுவில் 334 பேரும் பெர்லீஸ் மாநிலத்தில் 611 குடும்பங்களைச் சேர்ந்த 1,745 பேரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஜே.கே.எம் குறிப்பிட்டது.





