கோலாலம்பூர், நவ 26- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உதவிப்பொருட்கள் மற்றும் எந்தவகையான உதவிகளும் முதலில் ஒருநிலைப்படுத்த வேண்டும் என்றும் அனைவருக்கும் போதிய உதவிகள் கிடைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஜே.கே.எம் எனப்படும் சமூகநல துறை இலாகா நினைவுறுத்தியுள்ளது.
உதவிப்பொருட்களை ஒருநிலைப்படுத்துவதால் வீண் விரயம் போன்ற தேவையில்லாத சூழலைத் தடுத்த முடியும் என்று ஜே.கே.எம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
மக்களின் பரிவுமிக்க குணமும் அரசு சாரா அமைப்புகளின் உதவும் நடவடிக்கைகளையும் சமூகநல துறை இலாகா பெரிதும் வரவேற்பதாக அது குறிப்பிட்டது.
நன்கொடை அல்லது உதவி பொருட்களை வழங்க விரும்புகிறவர்கள் JKM கீழுள்ள இன்ஃபோ பென்சானா எனும் அகப்பக்கம் மூலம் அண்மைய தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.






