ad

2021 முதல் 5,293 ஆசிரியர்கள் முன்கூட்டியே ஓய்வு பெற்றுள்ளனர்: ஃபட்லினா

25 நவம்பர் 2025, 6:56 AM
2021 முதல் 5,293 ஆசிரியர்கள் முன்கூட்டியே ஓய்வு பெற்றுள்ளனர்: ஃபட்லினா

கோலாலம்பூர் நவ 25: கடந்த 2021 முதல் கிட்டத்தட்ட 5,293 ஆசிரியர்கள் முன்கூட்டியே ஓய்வு பெற்றுள்ளனர். கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் இதனை கூறினார்.

2021 முதல் 2024 வரை மொத்தம் 5,293 ஆசிரியர்கள் பொது சேவைத் துறையில் இருந்து விருப்பத்தின் மூலம் முன்கூட்டியே ஓய்வு பெறத் தேர்வு செய்தனர்.

கல்வி அமைச்சில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையில் இந்த எண்ணிக்கை 1.24 சதவீதம் ஆகும்.

கல்விமைச்சின் தரவுகளின் அடிப்படையில், முன்கூட்டியே ஓய்வு பெற விண்ணப்பித்த ஆசிரியர்களில் 67.44 சதவீதம் பேர், தங்கள் பணியைத் தொடர இனி ஆர்வம் காட்டவில்லை என்று முக்கியக் காரணமாகக் கூறினர்.

குடும்பப் பிரச்சினைகள் 17.43 சதவீதமாகவும், அதைத் தொடர்ந்து உடல்நலப் பிரச்சினைகள் 7.69 சதவீதமாகவும், பணிச்சுமை 5.37 சதவீதமாகவும், தனிப்பட்ட பிரச்சினைகள் 2.07 சதவீதமாகவும் உள்ளன.

நேற்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.