ஷா ஆலாம், நவ 25- ஷா ஆலாம் மாநகர் மன்றத்தின் கீழ் உள்ள அனைத்து வளாகங்களிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதித்துள்ளது.
நகரத்தின் நிலைத்தன்மை குறிக்கோளை வலுப்படுத்துவதற்கான முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
பிளாஸ்டிக் இல்லாத வழிகாட்டுதல்களைச் செயல்படுத்துவதற்கு இத்தீர்மானம் MBSA நிர்வாகக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இந்தத் தடை, விஸ்மா MBSA, அதன் கிளை அலுவலகங்கள், அரங்குகள், நூலகங்கள் மற்றும் பிற தொடர்புடைய அனைத்து MBSA சொத்துக்களுக்கும் பொருந்தும்.
மேலும், MBSA ஏற்பாடு செய்யும் அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளுக்கும், உத்தியோகபூர்வ நிகழ்வுகள், துறை கூட்டங்கள் மற்றும் சமூக நிகழ்ச்சிகள் உட்பட, இந்தத் தடை கட்டாயமாக்கப்படும் என்று ஷா ஆலம் மேயர், டத்தோ முகமட் ஃபௌஸி முகமட் யதிம் தெரிவித்தார்.
இதற்கிடையில், இயற்கை வளங்கள் மற்றும் நிலைத்தன்மை அமைச்சு (NRES) மேலும் பிளாஸ்டிக் மாசுபாட்டை முறையாகக் குறைப்பதற்கான நாட்டின் முதன்மை வியூகமாக 'ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் இல்லாத மலேசியாவை நோக்கிய சாலை வரைபடம் 2018–2030'-ஐ வலுப்படுத்தி வருகிறது.




