கோத்தா கினாபாலு, நவ 25- 17ஆவது சபா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான முன்கூட்டியே வாக்களிப்பு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.
இந்த தேர்தலில் சுமார் 24, 426 பேர் முன்கூட்டியே வாக்களிக்கின்றனர்.
மொத்தமுள்ள வாக்காளர் எண்ணிக்கையில் 11,697 பேர் இராணுவ வீரர்களும் அவர்களின் மனைவிமார்களும் மற்றும் 12,729 பேர் போலீஸ் அதிகாரிகளும் அவர்களின் துணைவியார்களும் என்று மலேசியத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது
முன்கூட்டியே வாக்களிப்புக்காக சுமார் 58 வாக்கு செலுத்தும் மையங்கள் மாநிலம் முழுவதும் காலை 8 மணி முதல் திறக்கப்பட்டுள்ளது
சபா மாநிலத்தில் இன்று முழுவதும் மழை பொழியும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சபா மாநில சட்டமன்ற தேர்தலில் 73 சட்டமன்ற இடங்களுக்கு 74 சுயேட்சை வேட்பாளர்களும் 596 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
17ஆவது சபா மாநில தேர்தல் எதிர்வரும் நவம்பர் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது.






