கோலாலம்பூர், நவம்பர் 24: மலேசிய வானிலை ஆய்வுத் துறை பல மாநிலங்களில் இடி, மின்னல், கனமழை மற்றும் பலத்த காற்றுக்கான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மெட் மலேசியாவின் அறிக்கைப்படி, இந்த எச்சரிக்கை கிள்ளான் பள்ளத்தாக்கு, பகாங், நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.
பேராவிலும்; சிலாங்கூரில் கிள்ளான், பெட்டாலிங், கோலா லங்காட், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்ற சூழ்நிலை கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா மாநிலங்கள் முழுவதும் எதிர்பார்க்கப்படுகிறது," என்று இன்று காலை வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





