ஷா ஆலாம், நவ 24: சிலாங்கூரில் உள்ள ஒன்பது நீர்ப்பாசன நிலையங்களில் (stesen) அபாயகரமான நீர்மட்டம் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ வெள்ளத் தகவல் இணையதளம் தெரிவித்துள்ளது.
இந்த ஒன்பது நிலையங்களில் கிள்ளான் மாவட்டத்தில் உள்ள நான்கு நிலையங்கள் அடங்கும். கிள்ளானில் உள்ள அபாயகரமான நீர்மட்டம் பதிவான நிலையங்கள்: தாமான் தேசா கெமுனிங்கில் உள்ள சுங்கை ரசாவ் (4.15மீ) மற்றும் துகு கெரிஸில் உள்ள சுங்கை ரசாவ் (3.96மீ), பண்டார் கிள்ளானில் உள்ள சுங்கை கிள்ளான் (3.09மீ), மற்றும் பேக்கான் மேருவில் உள்ள சுங்கை பின்ஜாய் (4.42மீ). மேலும், வேறு சில நிலையங்களிலும் அபாயகரமான நீர்மட்டம் பதிவாகியுள்ளது.
அவை: சுங்கை பெர்ணமில் உள்ள ஜம்பத்தான் SKC, உலு சிலாங்கூர் (20.08மீ), ரிம்பா KDR, சபாக் பெர்ணம் (2.35மீ), கம்போங் புடிமான், பெட்டாலிங்கில் உள்ள சுங்கை பக்குள் (8.30மீ), பத்து 12 உலு லங்காட்டில் உள்ள சுங்கை லங்காட் (43.16மீ) மற்றும் ஜண்டேரம் ஹிலிர், சிப்பாங்கில் உள்ள சுங்கை லங்காட் (11.29மீ) ஆகியனவாகும்.
இதேவேளை, ஆறு நிலையங்களில் எச்சரிக்கை (amaran) நிலை பதிவாகியுள்ளது. இவற்றில் கம்போங் மேலாயு ஸ்ரீ குண்டாங்கில் உள்ள சுங்கை குவாங் (23.65மீ), TTDI ஜெயாவில் உள்ள சுங்கை டாமன்சாரா (8.04மீ), மற்றும் புக்கிட் சாங்கில் உள்ள சுங்கை லங்காட் (3.95மீ) ஆகியவை அடங்கும். மேலும், எட்டு நிலையங்கள் கவனமாக இருக்க வேண்டிய (waspada) நிலையில் உள்ளன.
இவற்றில் சுங்கை கோம்பாக் பத்து 10 (76.68மீ) மற்றும் சுங்கை கிள்ளான் ஸ்ரீ மான்ஜா பெட்டாலிங் (8.55மீ) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. முன்னதாக, இன்று காலை 10.08 மணி நிலவரப்படி, சபா பெர்ணமில் இருந்து 19 குடும்பங்களைச் சேர்ந்த 69 பேர் டேவான் ஸ்ரீ பெர்ணம் மற்றும் டேவான் ஸ்ரீ ஸ்கிஞ்சான் ஆகிய தற்காலிக நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று சமூக நலத் துறையின் பேரிடர் தகவல் இணையதளம் தெரிவித்துள்ளது.






