கோலாலம்பூர், நவ 24- நாட்டிலுள்ள ஏழு மாநிலங்களில் வெள்ளம் காரணமாக பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை காலை முதலே அதிகரித்து வருகிறது.
அவ்வகையில் பினாங்கு, பேராக், பெர்லிஸ், கெடா, திரங்கானு, மற்றும் சிலாங்கூர் மற்றும் கிளாந்தான் அண்மைய வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளன.
வெள்ளப் பேரிடர் காரணமாக கிளாந்தான் மாநிலத்தில் 8,248பேர் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டனர். 3022 குடும்பங்களைச் சேர்ந்த அவர்கள் வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு 7830 ஆக இருந்த வெள்ள நிலவரம் தற்போது அதிகரித்துள்ளது. கிளாந்தான் மாநிலத்தில் 33 வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப் பட்டுள்ளதாக ஜே.கே.எம் இன்ஃபோ பெஞ்சானா தகவல் தெரிவித்தது.







