ad

சிலாங்கூர் வியாபாரிகள், சிறு வணிகர்கள் தினம் விற்பனையை 100% வரை உயர்த்தியது

24 நவம்பர் 2025, 5:31 AM
சிலாங்கூர் வியாபாரிகள், சிறு வணிகர்கள் தினம் விற்பனையை 100% வரை உயர்த்தியது

சுபாங் ஜெயா, நவம்பர் 23 — புத்ரா ஹைட்ஸில் உள்ள தி ரவுண்ட்எபவுட் என்ற இடத்தில் நடைபெற்ற  சிலாங்கூர்   வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்கள் தினம் (HPPKS) 2025-இன் முதல் பதிப்பு பெரும் வெற்றி பெற்றது. பல வியாபாரிகள் தங்கள் வழக்கமான விற்பனையை விட நூறு சதவீதம் வரை அதிக விற்பனை பதிவு செய்தனர்.

சுபாங் ஜெயா நகர மன்றப் பகுதியில் இரண்டு ஆண்டுகளாக வியாபாரம் செய்து வரும் புகோ செடோக் ஜெல்லி பால் வியாபாரி நூருல் அத்திகா முஸ்தபா, ஒரு கப் பத்து ரிங்கிட் விலையில் வழக்கமாக நாளொன்றுக்கு நூறு கப் வரை விற்பனை செய்வதாக கூறினார்.

பிலிப்பைன்ஸ் உணவால் ஈர்க்கப்பட்ட இந்த மெனு முன்பு ஜெல்லி இனிப்பாக இருந்தது, ஜெல்லி பால் டிரெண்ட் வைரலானதும் அதை புகோ செடோக் ஜெல்லி பாலாக மாற்றியதே இதன் சிறப்பம்சம் என்றார். இந்த நிகழ்ச்சியில் தன் விற்பனை நூறு சதவீதம் உயர்ந்ததாகவும், புதிய வாடிக்கையாளர்கள் அதிகம் வந்து ருசித்ததாகவும் தெரிவித்தார்.

மிகவும் சுத்தமான மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நட்பான வியாபாரி விருதையும் அவர் வென்றார். இது எதிர்பாராத அங்கீகாரம் என்றும், தூய்மை மற்றும் வாடிக்கையாளர் வசதிக்காக செய்த முயற்சிகளுக்கு கிடைத்த பரிசு என்றும் கூறினார்.

இதே போல், கிள்ளான் மாநகர் மன்றத்தைப் பிரதிநிதித்து பழ அடிக்ட்ஸ் வியாபாரி சான் சியோங் வீ   சிலாங்கூர்  பிளாட்ஃபார்ம் (PLATS) கூப்பனை அதிகம் பயன்படுத்திய விருதைப் பெற்றார். நிகழ்ச்சியில் நூறுக்கும் மேற்பட்ட பழச்சாறு கப் விற்று, நாளொன்றுக்கு ஆறு முதல் ஒரு ஆயிரம் ரிங்கிட் வரை விற்பனையும், முந் நூறுக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் நடந்தன, அவற்றில் பெரும்பாலானவை PLATS கூப்பன் மூலமே. தரமான பழங்களையும் தூய சாறுகளையும் மட்டுமே பயன்படுத்துவதாகவும், தன் கடையில் நூறுக்கும் மேற்பட்ட வகை பழச்சாறுகள் உள்ளதாகவும், அதில் அவகாடோ சாறு அதிகம் விற்பனையான தாகவும் அவர் குறிப்பிட்டார்.

6996fbe6e3abea6016c26d63e02867db.jpg

ஷா ஆலம் நகர மன்றப் பகுதியில் டத்தாரான் ஷா ஆலமில் இரண்டு ஆண்டுகளாக வியாபாரம் செய்து வரும் கோப்பி ஒப்பு வியாபாரி கார்த்தினி ரம்லி சிறந்த ஸ்டால் (உள்ளூர் அதிகாரசபை பெவிலியன்) விருதை வென்றார். கிளாசிக் அலங்காரத் தீம் கடைசி நிமிடத்தில் அறிவிக்கப் பட்டதால் வீட்டிலும் மாமியார் வீட்டிலும் இருந்த பழைய பொருட்களைக் கொண்டு அலங்கரித்து தாகவும், விருது எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ராஸ்பெர்ரி லாட்டே அவரது கடையின் சிறப்பு மெனுவாகவும், வழக்கமாக நாளொன்றுக்கு ஐம்பது கப், வார இறுதியில் நூறுக்கும் மேல் விற்பனையாகும் என்றும் கூறினார். “வியாபாரிகளும் சிறு வணிகர்கள் சிலாங்கூரின் டிஜிட்டல் பொருளாதார இயக்கிகள்” என்ற தீம் கொண்ட இந்நிகழ்ச்சி டிஜிட்டல் பரிவர்த்தனைகளையும் தொழில்நுட்பப் பயன்பாட்டையும் ஊக்குவித்தது.

மந்திரி புசார் சிலாங்கூர் (இன்கார்ப்பரேட்டட்) MBI மற்றும் அக்ரோவங்க் இணைந்து ஏற்பாடு செய்த இந் நிகழ்ச்சியில் இரண்டாயிரம் நுண்ணிய மற்றும் சிறு தொழில் முனைவோர் கலந்து கொண்டனர். பன்னிரண்டு உள்ளூர் அதிகார சபைகளும் அரசு நிறுவனங்களும் பங்கேற்றன. இரண்டு நாட்களில் பதினைந்தாயிரம் பார்வையாளர்கள் வந்திருந்தனர்.

cf1fb1f82a49ede71dee82a19b9e7ff4.jpg

இலவச வியாபார இடங்கள், தொழில் முனைவோர் உதவித் திட்டத் தகவல்கள், திறன் மேம்பாட்டு நிகழ்வுகள் ஆகியவை வழங்கப்பட்டன.சிறு வியாபாரிகளுக்கு  வார இறுதியில் வருமானத்தை இரட்டிப்பாக்கிட சிலாங்கூர் மாநில அற்புதமான முயற்சி இது  என்றார் அவர்.!

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.