ad

ஷா ஆலாமில் தொடர் மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின; மீட்புக் குழுவினர் விரைந்தனர்

24 நவம்பர் 2025, 4:47 AM
ஷா ஆலாமில் தொடர் மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின; மீட்புக் குழுவினர் விரைந்தனர்

ஷா ஆலம், நவ 24- கடந்த சில மணி நேரங்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக, ஷா ஆலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகள் இன்று அதிகாலை வெள்ளத்தில் மூழ்கின. இதையடுத்து, உள்ளூர் அதிகாரிகள் நீர் மட்டத்தைக் கண்காணிப்பிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் உடனடியாகச் செயல்பட்டு வருகின்றனர்.

இதுவரை உயிர் சேதம் எதுவும் பதிவாகவில்லை என்றாலும், மழை தொடர்வதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (MBSA) தங்கள் சிறப்பு நடவடிக்கைக் குழுவான 'பந்தாஸ்' (Skuad Tindakan Khas - Pantas) குழுவை செக்‌ஷன் 13-இல் உள்ள சுங்கை டாமன்சாரா (Sungai Damansara) உள்ளிட்ட வெள்ள அபாயம் நிறைந்த பல பகுதிகளுக்கு அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளது. "ஆய்வின்படி, நீர்மட்டம் அதிகரித்து வருவதைக் கண்டறிந்துள்ளோம். இருப்பினும், நீர் இறைக்கும் பம்புகள் (water pumps) சரியாகச் செயல்படுகின்றன," என்று MBSA இன்று அறிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் பின்வருமாறு:

செக்‌ஷன் 35-இல் உள்ள தாமான் டேசா கெமுனிங் (Taman Desa Kemuning)

செக்‌ஷன் U14-இல் உள்ள கம்போங் புடிமான் (Kampung Budiman)

செக்‌ஷன் U17-இல் உள்ள கம்போங் குபு காஜா (Kampung Kubu Gajah)

செக்‌ஷன் 13-இல் உள்ள ஜெயண்ட் (Giant) பல்பொருள் அங்காடிக்கு அருகிலுள்ள பகுதி

செக்‌ஷன் 25-இல் உள்ள தாமான் ஸ்ரீ லெம்பாயுங் (Taman Sri Lembayung)

செக்‌ஷன் U2-இல் உள்ள ஜாலான் ஓப்ரா (Jalan Opera)

மேலும், செக்‌ஷன் 19-இல் உள்ள பெர்சியாரான் ஜூப்லி பேராக் (Persiaran Jubli Perak); செக்‌ஷன் 16-இல் உள்ள பாடாங் ஜாவா-வில் உள்ள ஜாலான் மாட் ராஜி (Jalan Mat Raji); செக்‌ஷன் 25-இல் உள்ள ஜாலான் மன்தாப் 25/126 மற்றும் ஜாலான் செந்தோசா 25/129; செக்‌ஷன் 25-இல் உள்ள பெர்சியாரான் புடிமான் (Persiaran Budiman); மற்றும் செக்‌ஷன் 23-இல் உள்ள பெர்சியாரான் பெருசாஹான் (Persiaran Perusahaan) ஆகிய பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

நீர் மட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து, செக்‌ஷன் U1-இல் உள்ள தாமான் மேஸ்ரா (Taman Mesra) நோக்கிச் செல்லும் ஜாலான் பத்து தீகா லாமா  (Jalan Batu Tiga Lama) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் MBSA தெரிவித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புக் கருதி மாற்று பாதைகளைப் பயன்படுத்துமாறும், எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

"நிர்ணயிக்கப்பட்ட தற்காலிக நிவாரண மையங்களுக்கு (pusat pemindahan sementara) செல்லுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டால், தயவுசெய்து அறிவுறுத்தல்களுக்கு கீழ்ப்படியுங்கள். ஷா ஆலத்தில் வெள்ளம் தொடர்பான அவசர அல்லது உடனடி உதவிக்கு, பந்தாஸ் குழுவின் தொலைபேசி எண் 03-5510 5811-ஐ அழைக்கவும்" என்று MBSA மேலும் கூறியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.