பெட்டாலிங் ஜெயா, நவ 24- 16 வயதுக்கீழ்ப்பட்ட இளையோர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் அரசாங்கத்தின் நடைமுறை அடுத்தாண்டு முதல் அமல்படுத்தப்ப்படும் என்று தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
இந்த தடை உத்தரவு என்பது மடாணி அமைச்சரவையின் ஒருசேர முடிவாகும். மேலும், சிறார்கள் பாலியல் வன்கொடுமைகள் போன்ற நடவடிக்கைகளிலிருந்து தடுக்க இது முற்படும் என்று அமைச்சர் விவரித்தார்.
இணையம் மூலம் அதிகரித்துள்ள பகடிவதை சம்பவங்கள், பாலியல் தொந்தரவு, கட்டொழுங்கு பிரச்சனைகள் ஆகியவை நாட்டில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அடுத்தாண்டு முதல் 16 வயதுக்கீழ்ப்பட்ட இளையோர்கள் புதிதாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்தவும் புதிய கணக்குகளைத் திறக்கவும் விதித்துள்ள தடைகளை சமூக ஊடக நடத்துநர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.
இந்த நடவடிக்கையினால் மலேசியாவில் இணையத்தைப் பயன்படுத்தும் இளையோர்கள் பாதுகாப்பான முறையில் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் பயன்பட்டுத்த் முடியும் என்று லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.




