கோலா லங்காட், நவ 22 — வறுமை ஒழிப்பு திட்ட வரை உதவி மற்றும் i-SEED திட்டங்களின் கீழ் உள்ள தொழில் முனைவோருக்கு, சிலாங்கூர் சர்வதேச வணிக உச்சி மாநாடு (SIBS) போன்ற பெரிய கண்காட்சிகளில் பங்கேற்பதன் மூலம் தங்கள் சந்தைகளை சர்வதேச அளவில் விரிவாக்கும் வாய்ப்பு உள்ளது.
மாநில மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்பு நிர்வாகக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீராமன் கூறுகையில், மாநில அரசின் அணுகுமுறை வெறும் அடிப்படை உதவி வழங்குவதோடு நின்றுவிடாமல், தொழில் முனைவோரின் திறனை வளர்த்துக், அவர்கள் சுயசார்பு பெற்று நிலையான முறையில் வறுமையில் இருந்து வெளியேறும் வகையில் செயல்படுத்த படுகிறது.
“நாங்கள் அவர்களுக்கு மீனை மட்டும் கொடுப்பதில்லை; மீன் பிடிக்கும் தூண்டிலையும், அறிவையும் கொடுக்கிறோம், அவர்கள் தாங்களாகவே நிற்க வேண்டும். அதற்கான பயிற்சி வகுப்புகளும் வழி காட்டுதலும் வழங்கி, அதன் மூலம் அவர்களின் தொழிலை வலுப்படுத்த முடியும்,” என்றார் அவர்.
SIBS இல் பங்கேற்ற சில தொழில் முனைவோர் சிப்ஸ் மூலம் ஏற்றுமதி செய்து அரபு சந்தைக-ளுக்குள் நுழைவதில் வெற்றிபெற்றுள்ளதாகவும், இது உள்ளூர் பொருட்களின் தரம் நாளுக்கு நாள் நம்பிக்கை பெறுவதை நிரூபிப்பதாகவும் பாப்பா ராய்டு கூறினார்.
இருப்பினும், சந்தை அணுகல் மற்றும் இணைப்பு இன்னும் முக்கிய சவால்களாக உள்ளதால், SIBS போன்ற சர்வதேச தரத்தில் உள்ள கண்காட்சி-களே பொருட்களை விளம்பரப்படுத்த சிறந்த தளங்களாக உள்ளன என்றார்.
“மாநில முதலீட்டு நிர்வாகக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹானுடன் வெளிநாட்டுக் கண்காட்சி-யில் பங்கேற்க ஆர்வமுள்ள தொழில் முனை வோருக்கு இடங்கள் அல்லது தள்ளுபடி வழங்கும் வாய்ப்புகளை ஆராயலாம் என்றார்.
இது அவர்களை உயர்ந்த நிலைக்கு உயர்த்த உதவும்,” என்று பாப்பா ராய்டு கூறினார். நேற்று கோலா லங்காட்டில் உள்ள டத்தாரான் பந்தை மோரிப்பில் நடைபெற்ற திட்டவரை மற்றும் i-SEED கித்தா சிலாங்கூர் 2025 கார்னிவலைத் தொடங்கி வைத்த பின்னர் அவர் ஊடகங்களிடம் பேசினார்.
பல தொழில் முனைவோர் இப்போது பேஸ்புக் லைவ், டிக் டாக் லைவ் மூலம் தங்கள் பொருட்களின் விற்பனையை விரிவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
“உதாரணமாக, ஒரு பெண் தொழில் முனைவோர் பாரம்பரிய கேக்குகளை பெட்ரோனாஸுக்கு வழங்கும் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளார்.
சிறிய தொழில் நுட்பப் பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றைத் தீர்க்க நாங்கள் உதவி செய்கிறோம். முக்கியமானது, தொழில் முனைவோருக்கு ஆர்வமும் முன்னேற துடிப்பும் வேண்டும் என்ற உறுதியும் இருக்க வேண்டும். முயற்சி செய்பவர்களை அரசு ஒருபோதும் புறக்கணிக்காது,” என்று பாப்பா ராய்டு கூறினார்.





