ஷா அலம், 22 நவம்பர்-இன்று காலை யான், கெடா மாநிலத்தின் ஜாலான் சேடாகா தெங்கா பகுதியில், 10 மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுவர்கள் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தபோது கார் ஒன்று மோதியதில் இருவரும் உயிரிழந்தனர்.
காலை 9.15 மணிக்கு நடந்த இந்த விபத்தில், தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் இரு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு சிறுவர்களும் ஒன்றே சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தனர்; அவர்களில் ஒருவன் பின்புறம் நின்றபடி சென்றபோது கார் மோதியதாக ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.
யான் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரிண்டெண்ட் முகமது ஹமிசி அப்துல்லா சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.
“ஜாலான் சேடாகா தெங்காவில் சைக்கிளும் கார் ஒன்றும் மோதிய விபத்து தொடர்பாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்தது. இரு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கு 1987 சாலைப் போக்குவரத்து சட்டத்தின் பிரிவு 41 கீழ் விசாரணை செய்யப்படுகிறது




