கோத்தா பாரு, 22 நவம்பர்: கிளந்தானில் உள்ள பாசிர் மாஸ், பாசிர் பூத்தே மற்றும் கோத்தா பாரு என மூன்று மாவட்டங்கள், நேற்று தொடங்கி 26 நவம்பர் வரை நீடிக்கும் பருவமழை காரணமாக வெள்ளம் ஏற்படும் அபாயத்தில் உள்ளதாக நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை (JPS) தெரிவித்துள்ளது.
தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக மூன்று முக்கிய ஆறு பகுதிகளில் நீர்மட்டம் உயர்வு காணும் அபாயம் உள்ளது என்று இன்றைய அறிக்கையில் JPS கூறியது. “பாசிர் மாஸ், பாசிர் பூத்தே மற்றும் கோத்தா பாரு ஆகிய பகுதிகள் பாதிக்கப் படும் வாய்ப்பு அதிகம் என்று அறிக்கை வெளியாகியுள்ளது. மேலும் JPS தொடர்ந்து கண்காணிப்பு செய்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட இடங்களில் அதிக மழை பதிவானால் வெள்ள எச்சரிக்கைகள் புதுப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தது.
மேலும் முன்னறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னா அல்லது பின்னோ வெள்ளம் ஏற்படக்கூடும். எனவே, பேரழிவு மேலாண்மை முகமைகள் மற்றும் மக்கள், குறிப்பாக அபாய பகுதிகளில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருந்து அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்,” என்று அறிவுறுத்தப்பட்டது. பொது மக்கள் காலத்திற்கேற்ற தகவல்கள் மற்றும் எச்சரிக்கைகளை PublicInfoBanjir இணையதளம் அல்லது அவர்களின் சமூக ஊடகப் பக்கங்கள் வழியாகப் பெறலாம்.
நேற்று, மலேசிய கால நிலைத் துறை கிளந்தான் மற்றும் திரங்கானுவுக்கு 26 நவம்பர் (புதன்) வரை நீடிக்கும் விழிப்புநிலை மழை எச்சரிக்கை வெளியிட்டது.




