ad

பிகே.என்.எஸ். சுங்கைவே குடியிருப்பில் மின் கசிவு சரி செய்யும் பணிகள் நாளைக்குள் நிறைவடையும்

22 நவம்பர் 2025, 5:51 AM
பிகே.என்.எஸ். சுங்கைவே குடியிருப்பில் மின் கசிவு சரி செய்யும் பணிகள் நாளைக்குள் நிறைவடையும்

ஷா அலம், 22 நவம்பர்: பெட்டாலிங் ஜெயாவின் சுங்கைவே பகுதியில் உள்ள பி.கே.என்.எஸ். அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று ஏற்பட்ட மின் கசிவு பிரச்சனை இன்று அல்லது அதிகப் பட்சமாக நாளை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பவம் அந்த குடியிருப்பின் ‘பி’ தொகுதி மின் விநியோக பலகையில் ஏற்பட்ட மின் கசிவு மற்றும் முழுமையான தீயின் காரணமாக ஏற்பட்டது என்று  சிலாங்கூர் மாநில  தொழில்நுட்ப வளர்ச்சி ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் ஸ்ரீ செத்தியா தொகுதி மக்கள் பிரதிநிதியுமான  டாக்டர் ஃபஹ்மி ஙா தெரிவித்தார்.

“மின் விநியோக பலகையின் அடித்தளத்தில் ஏற்பட்ட குறுக்குச்சார இணைப்பே இந்த விபத்துக்கு காரணம். பலகை முழுவதும் எரிந்ததால் மின்சாரம்  வினியோகம் தடைப்பட்டு, அத்தொகுதியின் அனைத்து வீடுகளும் பாதிக்கப்பட்டன. மலேசியாவின் தேசிய மின்சார நிறுவனம் (TNB) தற்போது பழுது பார்த்து வருகிறது. இன்று மாலையோ அல்லது நாளைக்குள் வேலைகள் முடிக்கப்படும் என்று அவர் மீடியா சிலாங்கூருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உதவுவதற்காக ‘ஏ’ தொகுதியில் தற்காலிக தங்குமையையும் மாவட்ட நிலை அலுவலகம் மற்றும் சமூக நலத்துறை இணைந்து இயக்கி வருவதாக அவர் கூறினார். தற்போது 260 வீடுகள் மற்றும் சில கடைக்குடுப்புகளில் இருந்து ஒன்பது குடும்பங்கள் மட்டும் அந்த தற்காலிக மையத்தில் தங்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 17-அடுக்கு கட்டிடமானதால் மக்கள் மேல் மாடிகளுக்கு  செல்லுவதில் சிரமம் உள்ளவர்களுக்கு இது உதவியாக உள்ளது.

தற்காலிக தங்கும் இடத்திற்கு உதவி தேவைப்படுவோர் சமூக நலத்துறையின் துவான் பிரகாஷ் 013-632 0623 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.