கிள்ளான், நவ 21-கிள்ளான் கோத்தா ராஜா நாடாளுமன்ற பகுதிக்கு உட்பட்ட செந்தோசா சட்டமன்ற தொகுதி அளவிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு, நவம்பர் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.கிள்ளான், பண்டார் செந்தோசாவில் உள்ள NSK பல்பொருள் அங்காடி முன்புற வாகன நிறுத்துமிடத்தில் மேடை அமைத்து இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.செந்தோசா சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் கிள்ளான் மாநகர் மன்றத் டத்தோ பண்டார் டத்தோ ஹஜி அப்துல் ஹமிட் ஹுசைன், கிள்ளான் அரச மாநகர்மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.நிகழ்ச்சிக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு பிரகாஷ் சம்புநாதன் அவர்களும் வருகை புரிந்தார்.
செந்தோசா சட்டமன்ற தொகுதியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சி; சிறப்பாக நடந்தேறியது
22 நவம்பர் 2025, 1:49 AM






