கோத்தா கினாபாலு, நவ 21- சபா மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு செகாமா தொகுதியில் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ரோமான்ஸா லமினுக்கு ஆதரவாக தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
நேற்றிரவு தாமான் வாரிசான் பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட அவருக்கு சுற்றுவட்டார மக்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.
நிலையான அரசியல் சூழல், மக்களின் பிரச்சினைகளை செவிமடுக்கும் அரசாங்கம், சமூக மேம்பாடு ஆகியவற்றை அங்குள்ள மக்கள் எதிர்பார்பதாக சிறப்புரையாற்றிய சரஸ்வதி கூறினார்.
அதோடு, பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரோமான்ஸா லமினை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கான காரணங்களை அவர் பட்டியலிட்டு கூறினார்.
- உறுதியான பொருளாதார மேம்பாடு
- சமூக நலன், வாழ்க்கை செலவினத்திற்கு முன்னுரிமை அளித்தல்.
- இந்த பகுதி உட்பட சபா முழுவதும் மேம்பாடுகள் மற்றும் வாய்ப்புகளை கொண்டு வருவதில் ஒற்றுமை அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாடு.
- இந்தப் பகுதியில் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு சகோதரர் ரோமான்ஸா லமின் தலைமைத்துவம் முக்கியமானதாகும்.
மக்களின் வலுவான ஆதரவுடன், செகாமாவில் உள்ள குடும்பங்களுக்கும் அடுத்த தலைமுறைக்கும் சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும் என்று நான் தாம் நம்புவதாகவும் அவர் சரஸ்வதி கூறினார்.
செகாமா சட்டமன்ற தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இறங்கினார் துணையமைச்சர் சரஸ்வதி
21 நவம்பர் 2025, 7:48 AM




