கேமரன் மலை, நவ 21- கேமரன் மலையில் ஒப்ஸ் கேம்போர் சோதனை நடவடிக்கையின் மூலம் குடிநுழைவு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இங்கு அதிரடி சோதனைகளை நடத்தினர்.
இந்த சோதனையில் குடிநுழைவை உட்படுத்திய பல்வேறு குற்றங்களுக்காக சுமார் 468 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவு துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஸக்காரியா ஷாபன் கூறினார்.
வேளாண்மை மற்றும் காய்கறி வியாபார நடவடிக்கைக்கு இந்த பகுதி விளங்கி வந்த நிலையில் இந்த திடீர் சோதனையில் அந்நிய நாட்டவர்கள் எங்கும் தப்பித்து ஓட முடியாமல் போனதாக அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் 20 வயது முதல் 54 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அவர்களில் வங்காளதேசத்தைச் சேர்ந்த 174 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.




