ad

கிராமப்புற தொழில் முனைவோர் வலுப்படுத்தப்பட்டு உலகளாவிய சந்தையில் நுழைய ஸ்மார்ட் டேசா திட்டம்

21 நவம்பர் 2025, 7:37 AM
கிராமப்புற தொழில் முனைவோர் வலுப்படுத்தப்பட்டு உலகளாவிய சந்தையில் நுழைய ஸ்மார்ட் டேசா திட்டம்

ஷா ஆலாம், நவ 21- சிலாங்கூரில் கிராமப்புறத் தொழில் முனைவோரை வலுப்படுத்துவதற்காக, உள்ளூர் தயாரிப்புகளை சர்வதேச சந்தைக்கு தயார்படுத்தும், வாய்ப்புகளை வழங்கும் வகையில், ஸ்மார்ட் டேசா என்ற புதிய ஶ்ரீ  சிலாங்கூர் திட்டம் அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்பட வுள்ளது.

இந்தத் திட்டம் சமூக, கல்வி, பின்னடைவு மற்றும் புத்தாக்கம் ஆகிய நான்கு முக்கியக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டது என்று கிராமப்புற வளர்ச்சி மற்றும் கிராமப்புற விவகாரங்களுக்கான மாநிலச் செயற்குழு உறுப்பினர் டத்தோ ரிசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

இந்தக் "தூண்டுதல் திட்டம்" ஒன்பது மாவட்டங்களில் உள்கட்டமைப்பு, நிலப்பரப்பு நிலைத்தன்மை, மனித வளம், டிஜிட்டல் கிராமம், தொழில் முனைவோருக்கான சிறு மானியங்கள் மற்றும் பேரிடர் தயார்நிலை உள்ளிட்ட பல துறைகளில் கவனம் செலுத்தும்.

கிராமப்புறத் தொழில் முனைவோருக்கு அவர்களின் தயாரிப்புகளை மலேசியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் சந்தைப்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, முறையான கல்வி அறிவு, பேக்கேஜிங் மற்றும் ஆன்லைன் விற்பனை உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் கிராமப்புறத்தின் மூலோபாய வரைபடம் 2035-இன் கீழ் உள்ள ஸ்மார்ட் டேசா திட்டம், கிராமப்புறப் பகுதிகளில் சமச்சீர் வளர்ச்சியை உறுதி செய்வதற்கு அதிகமான மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

தற்போது கோலா லங்காட், சபாக் பெர்ணம், அம்பாங், பெட்டாலிங் மற்றும் கிள்ளான் ஆகிய ஐந்து மாவட்டங்களில் SMART Desa மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த மையங்களின் மூலம் கிராமப்புறச் சமுதாயக் கூடங்கள் (balai raya) புனரமைக்கப்பட்டு, இலவச இணைய உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளுடன் புத்துயிர் அளிக்கப்படுகின்றன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.