பெட்டாலிங் ஜெயா, நவ 21- மலேசிய ரேபிட் ட்ரான்சிட் கோர்ப் நிறுவனத்தின் (MRT CORP) புதிய தலைவராக சரிபுதீன் காசிம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன், சரிபுதீன் காசிம் மலேசியன் அவியேஷன் கொமிஷன் துறையில் தலைமை செயல் முறை அதிகாரியாக பொறுப்பு வகித்திருந்தார்.
MRT Corp தற்போது முதன்மையான ரயில் வழித்தடங்களை தனது செயலாக்கங்களில் கொண்டுள்ளது. அவ்வகையில் காஜாங் எம்.ஆர்.டி வழித்தடம், புத்ராஜெயா எம்.ஆர்.டி வழித்தடம் இருக்கிறது.
இன்னும் எதிர்காலத்தில் ஜொகூர் பாரு- சிங்கப்பூர் ஆர்.டி.எஸ் லிங்க் திட்டம், பினாங்கு எல்.ஆர்.டி முத்தியார லிங்க் திட்டம் ஆகியவை இன்னும் செயலாக்கத்தில் உள்ளதாக எம்.ஆர்.டி கோர்ப் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
எம்.ஆர்.டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைவராக சரிபுதீன் காசிம் நியமனம்
21 நவம்பர் 2025, 3:47 AM




