கோலாலம்பூர், நவ 21- எஃப்.ஏ.எம் எனப்படும் மலேசிய காற்பந்து சங்கத்திற்கான நிதிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க மலேசிய இளைஞர், மற்றும் விளையாட்டு துறை அமைச்சு முடிவு செய்துள்ளதாக அதன் அமைச்சர் ஹனா இயோ கூறினார்.
எப்ஏஎம் நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் வரை, தேசிய கால்பந்து அணிக்கு கூடுதல் நிதி எதுவும் வழங்கப்படக்கூடாது.மேலும், உள்ளூர் விளையாட்டு வீரர்களின் மேம்பாடு முன்னுரிமையாக இருப்பதை உறுதி செய்வதற்காக தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கையில் இருக்கும் என்று அமைச்சர் கருத்துரைத்தார்.
இப்போதைக்கு, கூடுதல் நிதி ஒதுக்கப்படக்கூடாது என்று மட்டுமே நான் பரிந்துரைக்க முடியும்.முதலில் தேசிய அணிக்கு உதவுவதிலும், மேம்பாடுகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்துங்கள்.
நேற்று மக்களவையில் இளைஞர், விளையாட்டு அமைச்சின் பட்ஜெட் மசோதா 2026 இன் இறுதி அமர்வில் அவர் இவ்வாறு கூறினார்.





