பெட்டாலிங் ஜெயாவில் 'சிலாங்கூர் ஸ்மார்ட் பார்க்கிங்' திட்டம் இன்னும் முன்னெடுக்கப்படவில்லை

21 நவம்பர் 2025, 3:42 AM
பெட்டாலிங் ஜெயாவில் 'சிலாங்கூர் ஸ்மார்ட் பார்க்கிங்' திட்டம் இன்னும் முன்னெடுக்கப்படவில்லை

ஷா ஆலாம், நவ 21- பெட்டாலிங் ஜெயா மாநகர மன்றத்தின் (MBPJ) நிர்வாகப் பகுதியில் சிலாங்கூர் இன்டேலிஜென்ட் பார்க்கிங் (SIP) திட்டம் முன்னெடுக்க படாததால் அதனை  முழுமையாக  செயல்படுத்துவதில்  இன்னமும் தாமதமாகியுள்ளது.இந்த தகவலை உள்ளூராட்சி, சுற்றுலா துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் ஸீ லிம் தெரிவித்துள்ளார்.

ரங்காயான் மெஸ்ரா எஸ்.டி.என்.பி.எச்.டி (RMSB) மற்றும் செல்மாக்ஸ் எஸ்.டி.என்.பி.எச்.டி ஆகியவற்றுடனான முத்தரப்பு ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை MBPJ இன்னும் இறுதி செய்யாததே இதற்குக் காரணம் என்று அவர் கூறினார்.

1996 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள சலுகை அடிப் படையிலான வாகன நிறுத்துமிட நிர்வாகத்தின் தொடர்ச்சியாகவே SIP அறிமுகப்படுத்தப்படுகிறது என்றும், இது நவீன தொழில்நுட்பம் மற்றும் ஒருங்கிணைந்த அமைப்பு மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஷா ஆலம் (MBSA), செலாயாங் (MPS) மற்றும் சுபாங் ஜெயா (MBSJ) ஆகிய மூன்று உள்ளூராட்சி அமைப்புகள் அக்டோபர் 2025 வரை ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளன.

இதனால், அந்தப் பகுதிகளில் SIP திட்டத்தை அட்டவணைப்படி தொடர முடிகிறது.ஆனால், MBPJ இன் சட்ட ஆவணங்களை இறுதி செய்யாதது பெட்டாலிங் ஜெயா வில் SIP செயல்படுத்துவதை மற்ற மூன்று PBT-களை விட தாமதப்படுத்தி உள்ளது.

சீரமைப்பு மாற்றம், உன்னிப்பான கண்காணிப்பு மற்றும் முறையான மேம்பாட்டிற்குப் பிறகு, சிலாங்கூரில் உள்ள அனைத்து உள்ளூராட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தும் நோக்குடன் SIP கட்டம் வாரியாக செயல்படுத்தப் படுகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

MBPJ திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புக் கொண்டால், அந்த உள்ளூராட்சி அமைப்புக்கு ஒரு வருடத்திற்கு சுமார் RM9 மில்லியன் நிகர வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்பம், டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் திறமையான அமலாக்க அமைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி, உள்ளூராட்சி அமைப்புகள் வாகன நிறுத்துமிட வசூலை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் சட்டசபையில் தெரிவித்தார்.

 மலேசிய காற்பந்து சங்கத்திற்கான நிதிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க இளைஞர் விளையாட்டு துறை அமைச்சு முடிவு

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.