ஷா ஆலாம், நவ 20- சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக் மற்றும் உலு லங்காட் ஆகிய சிலாங்கூர் மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு செய்துள்ளது.
பேராக், திரங்கானு, பகாங், ஜோகூர், சரவாக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களின் சில மாவட்டங்களிலும் நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் அல்லது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் வாய்ப்புள்ள இடி மின்னலின் அறிகுறிகள் தென்படும்போது இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக MetMalaysia தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இடி மின்னல் எச்சரிக்கையானது குறுகிய கால எச்சரிக்கை ஆகும்,
பொதுமக்கள் சமீபத்திய மற்றும் நம்பகமான தகவல்களைப் பெற www.met.gov.my என்ற இணையதளம், சமூக ஊடகங்கள் அல்லது myCuaca செயலியைப் பதிவிறக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.




