ஷா ஆலம், நவம்பர் 20- அம்பாங் ஜெயா நகராட்சி மன்றம் (MPAJ), கம்போங் தாசெக் பெர்மாய், முகிம் அம்பாங் பகுதியில் சட்டவிரோதமாக குப்பை கொட்டுவது தொடர்பான தொடர்ச்சியான பிரச்சினையைத் தீர்க்க ஒருங்கிணைந்த நடவடிக்கையாக சாலை மூடல்களையும் தடுப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் அமலாக்கத் துறை, நகர திட்டமிடல் துறை மற்றும் MPAJ இன் கட்டிடத் துறை மற்றும் உலு லங்காட் நிலம் மற்றும் மாவட்ட அலுவலகம் ஆகியவை ஒத்துழைப்பு வழங்கியது.
இந்த நடவடிக்கை சுற்றுப்புறத்தை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும், உள்ளூர் சமூகத்திற்கு எந்த ஒரு அபாயத்தையும் ஏற்படுத்தாமல் வைத்திருப்பதற்காக எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் தடுப்புகள் அமைக்கும் பணியில் தொடர்புடைய துறைகளின் தொழில்நுட்ப உறுதிப்பத்திரம் பெற்ற பிறகு சிறப்பு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டது. உலு லங்காட் நிலம் மாவட்ட அலுவலகம் நிலத்தின் நிலை மற்றும் சாலை மூடல் தேவையை உறுதிப்படுத்தியுள்ளது என அறிவிக்கப்பட்டது.
மக்கள் இது பொன்ற புகார்கள் அல்லது கருத்துக்களை SISPAA MPAJ இணையதளத்தில் அல்லது இலவச தொலைபேசி 1-800-22-8100 மூலம் தெரிவிக்கலாம்.




