கோலாலம்பூர், 20 நவம்பர்: மலேசிய வானிலை துறையான மெட்மலேசியா தப்போது ஏழு மாநிலங்களில் இன்று மதியம் 4 மணி வரை இடியுடன் கூடிய கன மழை மற்றும் கடுமையான காற்று எச்சரிக்கையை அறிவித்துள்ளது.
பேராக், திரங்கானு மற்றும் பகாங்கில் சில பகுதிகளில் இந்த கடுமையான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.
அதே மாதிரியான எச்சரிக்கை சிலாங்கூர், ஜோகூர் மற்றும் சராவாக்கில் பல மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், திரங்கானு மற்றும் கிளந்தான் மாநிலங்களுக்கு கடுமையான காற்று மற்றும் அலைகளுடன் கடல் எச்சரிக்கை வரும் புதன்கிழமை (நவம்பர் 26) வரை வழங்கப்பட்டுள்ளது. மூன்று முதல் 3.5 மீட்டர் உயரத்தில் வடகிழக்கு காற்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சிறிய படகுகள், கடல்சுற்றுலா மற்றும் நீர்விளையாட்டு நடவடிக்கைகளுக்கு அபாயம் உண்டாக்கும்.
நாளை வரை திரங்கானு மற்றும் கிளந்தான் கடல் பகுதிகளில் கடல் மட்டம் உயரும் என்றும், இதனால் கடலோரப் பெருக்கெடுப்பு ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




