ad

லங்காவியில் ஜெல்லி மீன் தாக்கி ரஷ்ய சிறுவன் உயிரிழப்பு

20 நவம்பர் 2025, 7:39 AM
லங்காவியில் ஜெல்லி மீன் தாக்கி ரஷ்ய சிறுவன் உயிரிழப்பு

ஷா ஆலம், 20 நவம்பர்: ரஷ்யாவைச் சேர்ந்த இரண்டு வயது ஆண் குழந்தை, கடந்த சனிக்கிழமை லங்காவி செனாங் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஜெல்லி மீன் தாக்கியதில் ஏற்பட்ட கடுமையான சிக்கல்களால், ஐந்து நாள் உயிர்போராட்டத்திற்குப் பிறகு புதன்கிழமை காலை உயிரிழந்தார்.

விஷத்தன்மை மிகுந்த கடல் உயிரினத்தின் தாக்குதலுக்கு ஆளானதில் ஏற்பட்ட உட்புணர்ச்சி சிக்கல்களால் பாதிக்கப்பட்டு, காலை 9.46 மணிக்கு சுல்தானா பாஹியா மருத்துவமனையில் (HSB) இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

சம்பவம் திடீரென நிகழ்ந்ததாகவும், ஆழம் குறைந்த நீரில் விளையாடிக் கொண்டிருந்த மகன் வலி என கத்தியதும், மனைவி உடனே அவரைத் தூக்கி வந்த சில வினாடிகளில் அவரின் மூச்சு நின்றுவிட்டது. நான் உடனே உயிர்க்காக்கும் உதவி (CPR) செய்தேன். அங்கு இருந்த பிற சுற்றுலாப் பயணிகள் எங்களை கடற்கரை காவலர் அருகே கொண்டு சென்றதாக அவரின் தந்தை நிகிதா தெரிவித்தார்.மேலும் அலோஸ்ட்டாரில் உள்ள மருத்துவக் குழுக்கள் மகனை காப்பாற்ற முயன்றதற்காகவும் தனது குடும்பம் மிகுந்த நன்றியுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க விருப்பமில்லை. இந்த துயரச் சம்பவம் கடற்கரைக்கு வரும் அனைவருக்கும் ஜெல்லி மீன் தாக்குதலின் ஆபத்தைக் குறித்து ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்,” என்று அவர் கண்கலங்கிக் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.