கோலாலம்பூர், நவ 20- தற்காப்பு வியூக ஒத்துழைப்பை வலுப்படுத்த மலேசியா- துருக்கி ஆகிய நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன. இதனால் தொழில்நுட்ப பரிமாற்றம், ஒருங்கிணைந்த மேம்பாடு மற்றும் உள்ளூர் தொழிற்துறை ஈடுபாடு போன்ற விவகாரங்களில் இரு நாடுகளும் நல்லுறவை வலுப்படுத்த முடியும்
இதனை நாட்டின் தற்காப்பு அமைச்சரான டத்தோஶ்ரீ முஹம்மட் காலிட் நோர்டின் கூறினார். துருக்கி நாட்டின் தொழில்நுட்ப தற்காப்பு நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி அஹ்மெட் அக்யோல் அவர்களை வரவேற்ற நிலையில் அமைச்சர் காலிட் நோர்டின் இவ்வாறு தெரிவித்தார்.
நீண்ட ஒத்துழைப்பு குறித்த இலக்கினை அடைய மலேசியா பல்வேறு தற்காப்பு தொழிற்துறை அம்சங்களை வரவேற்பதாகவும் இதனால் உள்ளூர் தொழிற்துறை மேலோங்கவும் நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தவும் இது ஏதுவாக இருக்கும் என்று அவர் கருத்துரைத்தார்.
அமைச்சர் காலிட் நோர்டினும், துருக்கி நாட்டின் தற்காப்பு அமைச்சர் யசார் குலரும் கடந்த ஜூலை மாதம் அனைத்துலக தற்காப்பு தொழிற்துறை கண்காட்சி நிகழ்ச்சியில் சந்தித்து கலந்துரையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது




