ஷா ஆலம், 20 நவம்பர்: Malaysia Vibe Fest (Half Marathon) 2025 நடைபெற இருப்பதை முன்னிட்டு, நவம்பர் 29 அன்று ஷா ஆலாம் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல முக்கிய சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படும்.
இந்த சாலை மூடல் அதிகாலை 4.00 மணி முதல் காலை 11.00 மணி வரை அமலில் இருக்கும் என்று ஷா ஆலாம் நகர மன்றம் தெரிவித்துள்ளது. இது 5 கிலோமீட்டர், 10 கிலோமீட்டர் மற்றும் 21 கிலோமீட்டர் பிரிவுகளில் பங்கேற்கும் ஓட்டப்பந்தய வீரர்களுக்கு பாதை வழங்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது.
I-City சுற்றுப் பகுதி, Jalan Plumbum, Persiaran Permai, Persiaran Kayangan, Persiaran Selangor, Persiaran Damai, Persiaran Masjid, Bulatan Bestari, பிரிவு 7, பிரிவு 14 மற்றும் பல முக்கிய சந்திப்புகள் இந்த நிகழ்வுக்காக மூடப்படவுள்ளது.
மேலும் பொதுமக்கள் பயணத்தைக் முன்கூட்டியே திட்டமிட்டு, மாற்று வழிகளைப் பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்குமாறு ஷா ஆலாம் நகர மன்றம் அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக மதிப்புக்குரியது என்று நகர மன்றத்தின் அறிவிப்பு தெரிவித்துள்ளது.





