காஜாங், 20 நவம்பர்: சொத்து மதிப்பீட்டு வரி செலுத்த தவறிய உரிமையாளர்களை குறிவைத்து, காஜாங் நகராட்சி மன்றம் நேற்று நடத்திய அமலாக்க நடவடிக்கையில் மொத்தம் ஏழு வளாகங்கள் மூடப்பட்டன.
இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை எம்.பி.கே.ஜே வின் வருவாய் பிரிவும் அமலாக்கத் துறையும் இணைந்து காஜாங் உத்தமா மற்றும் ஜாலான் ரேகோ பகுதிகளில் நடத்தியது. எம்.பி.கே.ஜே வெளியிட்ட அறிவிப்பில், வரி பாக்கி செலுத்தாத இட உரிமையாளர்களிடம் இருந்து நிலுவை மதிப்பீட்டு வரியை பெறுவதுதான் இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என தெரிவித்தது.
எம்.பி.கே.ஜே நிர்வாகப் பகுதிக்குட்பட்ட அனைத்து சொத்து உரிமையாளர்களும் தகுந்த மதிப்பீட்டு வரியை உடனடியாகச் செலுத்தி, சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டது,.
அதே நேரத்தில், மதிப்பீட்டு வரி கட்டணம் இணைய வசதிகள் உட்பட பல்வேறு வழிகளில் அல்லது அதிகாரப்பூர்வ கவுண்டர்களில் எளிதாகச் செலுத்தலாம் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது





