கோலாலம்பூர், நவ 20- அனைத்துலக காற்பந்து சம்மேளனமான ஃபிஃபாவின் உலக தரவரிசையில் மலேசியாவின் ஹரிமாவ் மலாயா அணி 116 ஆவது இடத்தைப் பிடித்தது.
கடந்த மாதம் 118ஆம் இடத்தில் இருந்த ஹரிமாவ் மலாயா அணி தற்போது இரு இடங்கள் முன்னேறி 116ஆவது இடத்திற்கு முன்னேறியது.
இந்த மகிழ்ச்சியான செய்தி ஹரிமாவ் மலாயா அணியின் ஆட்டக்காரர்களையும் ரசிகர்களையும் இன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது ஹரிமாவ் மலாயா அணியை பீட்டர் கெளமோவ்ஸ் நிர்வகித்து வருகிறார்.
தென்கிழக்காசியாவில் பிற நாடுகளான தாய்லாந்து 95 ஆவது இடத்திலும் வியட்நாம் 110ஆவது இடத்திலும் இந்தோனேசியா 122 ஆவது இடத்திலும் பிலிப்பைன்ஸ் 136 ஆவது இடத்திலும் சிங்கப்பூர் 151 ஆவது இடத்திலும் உள்ளன.
ஆசியாவின் காற்பந்து அணிகளில் முதன்மையான ஜப்பான் 18ஆவது இடத்திலும் ஈரான் 20 ஆவது இடத்திலும் தென் கொரியா 22ஆவது இடத்திலும் தரவரிசையில் உள்ளது.




