அட்டிஸ் அபாபா, நவ 20- வர்த்தகம், முதலீடு மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான அரச தந்திர உறவுகளில் மலேசியாவும் எத்தியோபியாவும் இணைந்து வலிமையின் பயனை அடைய முயற்சி செய்யும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் மூலம் அரச தந்திர ஈடுபாடு மேற்கொள்ளப்பட்டு பொருளாதாரம், முதலீடு ஆகிய துறைகள் மேலோங்க செய்யப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
மலேசியா அதன் வர்த்தகத்தை ஆப்பிரிக்கா கண்டத்தில் குறிப்பாக ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கும் விரிவுப்படுத்த தயாராக உள்ளதாக அன்வார் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
எத்தியோபியா நாட்டில் ஆப்பிரிக்கா ஒன்றியம் தலைமை அலுவலகம் இருப்பதால் இந்நாடு வட்டார வியூக பகுதியாக மலேசியா பார்ப்பதாக அவர் சொன்னார்.
ஆப்பிரிக்கா கண்டத்தில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் மேற்கொள்ளும் முதலாவது அலுவல் பயணம் இதுவாகும். நவம்பர் 18ஆம் தேதி தொடங்கிய பிரதமர் அன்வாரின் அரசுமுறை பயணம் இன்று நவம்பர் 20ஆம் தேதி நிறைவடைகிறது.




