ad

வெள்ளத் தடுப்பு திட்டங்களில் கிள்ளானுக்கு முன்னுரிமை அவசியம்- பண்டார் பாரு கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்

19 நவம்பர் 2025, 10:19 AM
வெள்ளத் தடுப்பு திட்டங்களில் கிள்ளானுக்கு முன்னுரிமை அவசியம்- பண்டார் பாரு கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்

ஷா ஆலாம், நவ 19- ஆற்றுப் படுகை மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடு வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளும் கிள்ளான் பகுதிக்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பண்டார் பாரு கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் (ADN) டாக்டர் குவா பெர்ங் ஃபெய் (Dr Quah Perng Fei) நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வெள்ளச் சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார். "வெள்ளத் தணிப்பு திட்டங்களுக்காக பல நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன, மேலும் குறிப்பாக அபாயகரமான கிள்ளான் பகுதிகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்று நான் நம்புகிறேன்.

மேலும், உள்ளூர் அதிகாரிகள் சுத்தம் செய்யப்பட்ட வடிகால்களின் நிலை, செயல்படும் பம்புகள் மற்றும் இடிக்கப்பட்ட சட்டவிரோத கட்டுமானங்கள் குறித்து ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் கட்டாயம் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் நான் பரிந்துரைக்கிறேன்," என்று அவர்  தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில் பேசிய அவர், வடிகால்கள் அல்லது ஆறுகளில் குப்பைகளை வீசி அடைப்பை ஏற்படுத்தும் தரப்பினர் மீது கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்றும் மாநில அரசுக்கு பரிந்துரைத்தார். முன்னதாக, மாநில மந்திரி புசார் அவர்கள், சிலாங்கூர் பட்ஜெட் சமர்ப்பிப்பின் மூலம், வெள்ளத் தடுப்புத் திட்டங்களைப் பலப்படுத்துவதற்காக RM 54.34 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், இதில் கிள்ளான் ஆற்றுப் படுகை க்கு மட்டும் RM16.92 மில்லியன் உட்பட 17 புதிய திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், நீர் நிர்வாகத்தை மேலும் ஒருங்கிணைத்து மேற்கொள்ள சிலாங்கூர் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறைக்கு (JPS) RM11.51 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்திருந்தார். இதற்கிடையில், டாக்டர் குவா பெர்ங் ஃபெய், உள்ளூர் மக்களின் பாதுகாப்பிற்காக எந்த ஒரு திட்டத்தையும் பாதியில் நிறுத்துவதை மாநில அரசாங்கம் தவிர்க்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.