ஷா ஆலாம், நவ 19- வெள்ளப் பிரச்சினைக்கு அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டாலும், டாமன் கிரீன்வில், டாமன் புக்கிட் கெமுனிங் போன்ற பல பகுதிகள் கவனிக்கப்பட வேண்டும்.
இதனை கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தினார்.
கோத்தா கெமுனிங் சிறப்பு வெள்ள நிவாரண நிதி அமைத்தல், நீரோடை சீரமைப்பு மற்றும் பேரிடர் உதவித் தொகையை RM3,000–RM5,000 ஆக உயர்த்துதல் அவசியம். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, அங்கெரிக் மொகாரா மேம் பாலம் கட்டுவதற்கான தெளிவான தேதியையும், LRT/MRT இணைப்புக்கான அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தையையும் தொடங்குமாறு கோரப்பட்டுள்ளது. புக்கிட் கெமுனிங் சாலையைச் முழுமையாக மேம்படுத்தி, சேதமடைந்த சாலைகளையும் இருண்ட பகுதிகளையும் சரிசெய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்




