கோலாலம்பூர், நவ 19- ஆசியக் கிண்ண 2027 தகுதிச் சுற்றின் 'எஃப்' பிரிவில் மலேசியா தொடர்ந்து பெற்றுள்ள ஐந்து வெற்றிகள், தேசிய கால்பந்து அரங்கில் தற்போது நிலவும் களத்திற்கு வெளியேயான குழப்பங்களைச் சிறிது காலத்திற்குத் தணிக்கும் என்று நம்பப்படுகிறது.
தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பீட்டர் கிளாமுவ்ஸ்கி (Peter Cklamovski), தனது அணியினர் தோல்வியடையாத சாதனையைப் பேணி, குழு அட்டவணையில் ஆதிக்கம் செலுத்தி வருவது, ஹரிமாவ் மலாயா (Harimau Malaya) ஆதரவாளர்களால் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று என்று கூறினார்.
"நான் அவர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்... அவர்கள் காட்டிய அர்ப்பணிப்பு, சர்வதேச கால்பந்து போட்டிகளில் வெற்றி பெறுவது எளிதான காரியம் அல்ல. இந்த ஆண்டு நாங்கள் அனைத்தையும் செய்துவிட்டோம், தோல்வியே இல்லை," என்று நேற்று நேபாளத்திற்கு எதிரான போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
நேற்றைய தினம் நேபாளத்திற்கு எதிராகப் பெற்ற 1-0 என்ற வெற்றி, ஐந்து போட்டிகளுக்குப் பிறகு மலேசியா தனது முழுமையான சாதனையைப் பேணுவதை உறுதிசெய்து, 'எஃப்' பிரிவில் 15 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இதில் வியட்நாம் (ஒன்பது புள்ளிகள்) இரண்டாவது இடத்திலும், லாவோஸ் (மூன்று புள்ளிகள்) மூன்றாவது இடத்திலும், நேபாளம் (பூஜ்ஜியப் புள்ளிகள்) கடைசி இடத்திலும் உள்ளன




