கோலாலம்பூர், நவம்பர் 19 — கடந்த திங்கட்கிழமை திடீர் நீரெட்டத்தில் கிள்ளான் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன ஆடவர் பயன்படுத்திய வாகனம் இன்று காலை தேடல்-மீட்பு குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
நீர்மட்டம் குறைந்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திலிருந்து சுமார் 1.5 கிலோமீட்டர் தூரத்தில், காலை 8.30 மணியளவில் அந்த கார் கண்டுபிடிக்கப்பட்டது என்றார் டாங் வாங்கி மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏ.சி.பி. சசாலி ஆடம். இதில் காணாமல் போன நபர் வாகனத்தின் உள்ளே இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. வாகனம் மீட்கப்பட்டு, உரிமையுள்ள நிறுவனத்துக்குத் திருப்பி வழங்கப்பட்டது, என அவர் சம்பவ இடத்தில் ஊடகங்களுக்கு தெரிவித்தார். மூன்றாவது நாளைக் கடக்கும் தேடல்-மீட்பு நடவடிக்கை, நேற்று மாலை 6.30 மணிக்கு நிறுத்தப்பட்ட பின், இன்று காலை மீண்டும் தொடங்கியது. காணாமல் போனவர் 34 வயதான ஆண் ஆகும்.
இன்று நடைபெறும் நடவடிக்கையில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை மற்றும் கடல் காவல்படையை சார்ந்த மொத்தம் 21 நீர்மூழ்கி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கூடுதலாக ட்ரோன்கள், சிறிய படகுகள் மற்றும் கயாக்குகளும் ஆற்றின் ஓரம் தேடுதலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. தேடுதல் நடவடிக்கை தப்போது சிலாங்கூருக்குள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், பூச்சோங்,, ஷா ஆலம் மற்றும் கிள்ளான் பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது.
திங்கட்கிழமை மாலை ஐந்து முப்பது மணிக்கு ஏற்பட்ட இந்தச் சம்பவத்தில், மேலும் பதினொன்று பேர் சிக்கிக் கொண்டனர். ஆனால் அவர்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை குழுவினரால் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்




