கோலாலம்பூர், நவ 19- சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு எக்கோனோமி பிரிமியம் எனும் சேவையை வழங்கும் விதமாக ராக்கான் கே.கே.எம். திட்டம் அடுத்த மாதம் சைபர்ஜெயா மருத்துவமனையில் தொடங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மட் கூறினார்.
இந்த திட்டத்தினால் சுகாதார அமைச்சின் மருத்துவர்கள் நோயாளிகளுக்குத் தகுந்த சிகிச்சைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மருத்துவர்கள் அரசு துறையில் இருந்து தனியார் துறைக்குச் சென்று தங்களின் மருத்துவ சேவையை வழங்கலாம். பிறகு மீண்டும் அரசு துறைக்கே திரும்ப வழிவகுக்கலாம் என்று சுல்கிஃப்ளி விளக்கம் அளித்தார்.
ராக்கான் கே.கே.எம் மூலம் நோயாளிகள் தங்களின் வேண்டிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதுடன் அவர்களுக்கு அனைத்து கே.கே.எம். வசதிகளுடன் கூடிய உயர்தர சிகிச்சை வழங்கப்படும் என்று அமைச்சர் விவரித்தார்.
பொது சுகாதார துறையில் இருக்கும் பணியாளர்களின் நலன்களைக் காப்பதில் மலேசிய சுகாதார அமைச்சு கடப்பாடு கொண்டுள்ளதாக டாக்டர் சுல்கிஃப்ளி சொன்னார்




