பாகு, நவ 19- பாகிஸ்தான், உகாண்டா, மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகள் மலேசியாவுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த தீவிரம் காட்டுவதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
குறிப்பாக, தகவல், தொலைத்தொடர்பு துறைகளில் அந்நாடுகள் மலேசியாவுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்தி கொள்ள விருப்பம் கொண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
முன்னதாக, அம்மூன்று நாடுகளுடனான தகவல், தொலைத்தொடர்பு துறைகளின் பன்முக கூட்டத்திற்குப் பிறகு டத்தோ ஃபஹ்மி செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
கருத்து பரிமாற்றம், கொள்கைகள் வரையறை தொடர்பான பேச்சுவார்த்தைகளும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், இணைய பயன்பாடு குறித்து மலேசியாவின் முன்னெடுப்புகளை கற்றுக்கொள்வதில் உகாண்டா நாடு ஆர்வம் காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
இந்த கூட்டத்தில் மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையத்தின் துணை இயக்குநர் டத்தோ சுல்கர்னாய்ன் முஹம்மத் யாசின், தொடர்பு அமைச்சின் தகவல், தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அஹ்மட் நோர்ஹட் ஸஹாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.




