கோலாலம்பூர், நவ 19- 2027ஆம் ஆண்டுக்கான ஆசியா கிண்ண காற்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் மலேசியாவின் ஹரிமாவ் மலாயா அணி நேபாள அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
நேற்றிரவு கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெற்ற இவ்வாட்டத்தில் ஹரிமாவ் மலாயா அணி பல கோல் தாக்குதல்களை முன்னெடுத்தாலும், ஒரே ஒரு வெற்றி கோல் மூலம் மூன்று புள்ளிகளை வெற்றிக்கொண்டது.
எஃப் குழுவில் இருக்கும் ஹரிமாவ் மலாயா அணி கடந்த ஐந்து ஆட்டங்களில் தொடர் வெற்றிகளைப் பதிவு செய்து வருகிறது. அக்குழுவில் ஹரிமாவ் மலாயா அணி 15 புள்ளிகளைக் கொண்டு புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இரண்டாவது இடத்தில் வியட்நாம் அணியும் மூன்றாவது இடத்தில் லாவோஸ் அணியும் இருக்கின்றன. ஆட்டத்தின் இரண்டாம் பாதியின் 55ஆவது நிமிடத்தில் முஹம்மட் ஃபைசால் மூலம் மலேசியா வெற்றிக்கோலைப் பதிவு செய்தது.
அடுத்த ஆட்டம் அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதி ஹனோயில் நடைபெறவுள்ளது. மலேசியா வியாட்நாம் அணியைச் சந்தித்து விளையாடவுள்ளது.




