கோலாலம்பூர், நவ 19- மலேசிய இந்திய சமுதாய மாற்றத்திற்கான பிரிவு (MITRA) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டிற்கான உயர்கல்வி நிறுவனங்களின் ஆரம்ப சேர்க்கை உதவித்திட்டம் (IPT 5.0 MITRA) தொடர்வதற்கான விண்ணப்பக் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 2025/2026 கல்வியாண்டின் முதல் வருட மாணவர்களுக்காக திறக்கப்பட்டுள்ள இந்த உதவித்திட்டத்திற்கான விண்ணப்பங்கள், 2025 நவம்பர் 17, திங்கள், காலை 9.00 மணி முதல் 2025 நவம்பர் 30, ஞாயிறு, மாலை 6.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் Google படிவம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தை MITRA-வின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது வழங்கப்பட்ட Google படிவ இணைப்புகள் மூலம் பெறலாம்.
விண்ணப்பதாரர்கள், விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் முன், MITRA-வின் 2025-ஆம் ஆண்டு IPT ஆரம்ப சேர்க்கை உதவித்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கவனமாகப் படித்துப் புரிந்துகொள்ளுமாறு MITRA வலியுறுத்தியுள்ளது.
விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளதால், இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மிகவும் அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் விபரங்களுக்கும் அல்லது தகவல்களுக்கும் MITRA JPM முகநூல் பக்கத்தை மாணவர்கள் வலம் வர கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.




