கோலாலம்பூர், நவம்பர் 19: சீனாவிலிருந்து வந்த இரு பெரும் பாண்டாக்கள், சென் ஜிங் மற்றும் சியாவோ யூ, இன்று மாலை 8.30 மணிக்கு கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக வந்தடைந்தது.
இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுப்புற நிலைத்தன்மை அமைச்சு (NRES) வெளியிட்ட அறிக்கையில், இந்த இரு தேசிய மிருகக்காட்சி சாலையில் உள்ள பாண்டா பாதுகாப்பு மையத்திற்கு அழைத்து செல்லவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சேன் சிங் மற்றும் சியாவ் யூ ஒரு மாத கால தனிமைப்படுத்தல் முறைக்கு உட்படுத்தப்பட்டு, விலங்குச் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் மேலாண்மையில் பாதுகாப்பாக இருக்கப் போகின்றன. பின்னர் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. பாண்டாக்களின் வரவு மலேசியா மற்றும் சீனா இடையேயான நேர்மையும் நிலைத்த நட்பையும் பிரதிபலிக்கிறது.
“மலேசியா, சுற்றுப்புற நிலைத்தன்மை அமைச்சு வழியாக, சீனாவுடன் இணைந்து சர்வதேச பாண்டா பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டத்தை தொடர்கிறது. இதற்கான புதிய ஒப்பந்தம் சீனத் தலைவர் மலேசியாவுக்கு வருகை தந்த ஏப்ரல் 16 அன்று கையெழுத்தானது,” என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி, 2025 முதல் 2035 வரை, மலேசியா 10 வருடங்களுக்கு புதிய இளம் பாண்டா ஜோடிகளை பெறும் உரிமை பெற்றுள்ளது.
இரு பாண்டா கரடிகள் சீனாவிலிருந்து மலேசியா வந்துள்ளன
19 நவம்பர் 2025, 7:56 AM




