புத்ராஜெயா, நவ 19- நீதித்துறை நியமன ஆணையத்தின் உறுப்பினராக அஹ்மட் தெர்ரிருடின் சலே நியமிக்கப்பட்டார்.
கடந்த மாதம் நீதித்துறை நியமன ஆணையத்தின் உறுப்பினராக இருந்த ஸபாரியா யூசோஃப் பணி ஓய்வு பெற்ற நிலையில் அவர் இந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.
2009ஆம் ஆண்டு JAC சட்டத்தின் செக்ஷன் 5(1) இன் கீழ் இந்த நியமனத்தைப் பிரதமர் அவர்கள் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
அஹ்மட் தெர்ரிருடின் சலே தற்போது கூட்டரசு பிரதேச நீதிபதியாக பதவி வகித்து வருகிறார்.
ஒன்பது நீதித்துறை நியமன ஆணையத்தின் உறுப்பினர்களில் தற்போது அஹ்மட் தெர்ரிருடின் சலேவும் இடம்பெற்றுள்ளார்.




