கோலாலம்பூர், நவ 19- கோலாலம்பூரின் புதிய மேயராக நியமிக்கப்பட்டிருக்கும் டத்தோ ஃபாட்லுன் மாக் உஜுட் அவர்களுக்கு தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி அவர்கள் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவரது நியமனம் குறித்துப் பேசிய சரஸ்வதி கந்தசாமி, "புதிய மேயரின் நியமனம் நாட்டின் தலைநகரின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தைத் தரும் என்றும், நகரின் நலனை உறுதி செய்வதோடு, மக்களின் சேவைத் தரத்தையும் உயர்த்தும் என்றும் நம்புவதாக"க் கூறினார்.
மேலும், "டத்தோ ஃபாட்லுன் மாக் உஜுட் அவர்களின் அனுபவத்தையும், தலைமைத்துவப் பண்புகளையும் கொண்டு, கோலாலம்பூர் தொடர்ந்து ஒரு உள்ளடக்கிய (inclusive), திறன்மிக்க மற்றும் முன்னேற்றகரமான உலகத் தரமிக்க பெருநகரமாக உயரும்" என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
டத்தோ ஃபாட்லுன் மாக் உஜுட் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட துணையமைச்சர் சரஸ்வதி, இந்த மாபெரும் பொறுப்பைச் சுமக்க அவருக்கு வலிமையும் ஞானமும் தொடர்ந்து கிடைக்கும் என்று பிரார்த்திப்பதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்




