ஷா ஆலம் 19 நவம்பர்- உலகளாவிய இணைய உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு நிறுவனமான Cloudflare- இல் ஏற்பட்ட சேவை செயலிழப்பு முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளது.
அந்த தடங்கலால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான மலேசிய பங்குச் சந்தை, தங்களின் சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி, வழக்கம்போல் அணுகக்கூடியதாக உள்ளதாக தெரிவித்தது. மேலும் “இந்த தடங்கல் காலத்தில் மக்கள் காட்டிய பொறுமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று நிறுவனத்தின் அறிக்கை நேற்று இரவு தெரிவித்தது.
இதற்கு முன், கிளவுட்ஃப்ளேர் உள்துறை சேவையில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக சில உள்ளூர் இணையதளங்களும் செய்தித் தளங்களும் அணுக முடியாத நிலை ஏற்பட்டது.
சமீபத்திய தகவல்படி, கிளவுட்ஃப்ளேர் தொழில்நுட்ப மாற்றங்களை மேற்கொண்டு, தங்களின் ஆக்சஸ் மற்றும் Warp சேவைகள் முற்றிலும் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் கிளவுட்ஃப்ளேர் உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் இணைய அடித்தளம் மற்றும் பாதுகாப்பு வழங்குநராகும்.
Cloudflare செயலிழப்பு பிரச்சனை தீர்க்கப்பட்டது ,அது இயல்பு நிலைக்குத் திரும்பியது
19 நவம்பர் 2025, 4:40 AM




