கிள்ளான், நவ 19- சிலாங்கூர் மாநிலத்தின் கோத்தா ராஜா நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட செந்தோசா சட்டமன்ற தொகுதியின் தீபாவளி கொண்டாட்ட திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வு எதிர்வரும் நவம்பர் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியானது மாலை 7.01 மணிக்கு பண்டார் செந்தோசா NSK வளாகத்தின் கார் நிறுத்துமிடத்தில் (Car Park) நடைபெறவுள்ளது.

இந்த செந்தோசா தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு (Majlis Rumah Terbuka Deepavali DUN Sentosa) நிகழ்ச்சியில், கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள், நட்சத்திரங்களின் வருகை, அதிர்ஷ்டக் குலுக்கல் மற்றும் பல்வேறு வகையான சுவையான பாரம்பரிய உணவுகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இக் கொண்டாட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு குணராஜ் ஜோர்ஜ் அழைப்பு விடுத்தார்.




