ஷா ஆலாம், 18 நவம்பர்: சிலாங்கூர் அரசு வழங்கும் டாருல் ஏஹ்சான் மரணசகாய உதவி நிதி திட்டத்திற்கு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை மொத்தம் 123,343 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக சமூக நலத்துறை பொறுப்பாளர் அன்பால் சாரி தெரிவித்தார்.
இதுவரை பெற்ற விண்ணப்பங்களில் 99,621 பேர் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். மேலும் 17,845 விண்ணப்பங்கள் ஆய்வில் உள்ளன, 5,259 விண்ணப்பங்கள் முழுமையற்றவை, மற்றும் 618 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்தத் திட்டத்திற்காக மாநில அரசு 20 மில்லியன் நிதி ஒதுக்கியுள்ளது. ஆனாலும் இறப்பு உதவித் தொகைக்கான கோரிக்கைகள் இன்னும் 10 மில்லியனும் எட்டவில்லை. இதனால் பலர் இந்தத் திட்டம் பற்றிய விழிப்புணர்வு பெறவில்லை என்பது தெளிவாகிறது என்று அவர் கூறினார். எனவே, முதியோர் பரிவுத் திட்டத்தில் பதிவாகியுள்ளவர்களை தானாகவே இந்த இறப்புதவித் திட்டத்துக்கு மாற்றும் புதிய முறையை அரசு ஆய்வு செய்ய உள்ளது. இதனால் அதிகமான குடும்பங்கள் பயன் பெறுவார்கள் என நம்பப்படுகிறது.
2026-ஆம் ஆண்டின் சிலாங்கூர் மாநில பட்ஜெட் திட்டத்தில் மந்திரி புசார் 15 மில்லியன் நிதியைத் ஒதுக்கி, ஆயிரம் ரிங்கிட் இறப்பு உதவித் தொகையை வழங்குவதாக அறிவித்துள்ளார். பொதுமக்கள் புதிய பதிவு அல்லது தகவல் புதுப்பித்தலை இணையம் வழியாக செய்துக் கொள்ளாம்.




