ஷா ஆலம், நவ 18: இன்று பத்து கேவ்ஸ் பகுதியில் உள்ள ஜாலான் லிங்காரான் தெங்கா 2 (MRR2) சாலையில், பெண் ஒருவரின் காரின் மீது இரும்பு கட்டமைப்பு பொருள் விழுந்துள்ளது. இதில் அப்பெண் பாதிப்பு ஏதும் இல்லாமல் உயிர் தப்பித்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக மதியம் 1:47 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்றதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் உதவி இயக்குநர் அக்மட் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.
“ECRL (கிழக்கு கடற்கரை ரயில் பாதை) திட்ட கட்டுமானப் பொருள் இடிந்து, சுசூகி ஸ்விஃப்ட் வாகனத்தின் மேல் விழுந்தது என தகவல் கிடைத்ததாக,” அவர் கூறினார். “சம்பவ இடத்திற்கு தீயணைப்பு குழு வந்தபோது, பாதிக்கப்பட்ட பெண்ணை பொதுமக்கள்
ஏற்கனவே காரிலிருந்து வெளியேற்றிருந்தனர்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குறிப்பிட்ட இடத்தில் தீயணைப்பு துறை தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாக அக்மட் முக்லிஸ் கூறினார்.
பாதிக்கப்பட்ட வாகன ஓட்டுனர் காயங்கள் இன்றி காப்பாற்றப்பட்டுள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.




