ad

கெத்திங் ஹைலண்ட்ஸ் சாலையைப் பயன்படுத்த சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே கட்டணம் விதிக்கப்பட வேண்டும்

18 நவம்பர் 2025, 9:10 AM
கெத்திங் ஹைலண்ட்ஸ் சாலையைப் பயன்படுத்த சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே கட்டணம் விதிக்கப்பட வேண்டும்

கோலாலம்பூர், நவ 18 — கெத்திங் ஹைலண்ட்ஸ் வழியாக செல்லும் வாகனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதை 'டோல்' கட்டணம் எனக் குறிப்பிடப்படக் கூடாது.

அது ரிசார்ட் பகுதி ச?மேம்பாட்டாளரின் தனியார் சாலைக்கு விதிக்கப்படும் வாகனக் கட்டணம் எனக் கருதப்பட வேண்டும் என்று துணைச் அமைச்சர் டத்தோ ஸ்ரீ அஹ்மட் மஸ்லான் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்கனவே 33 டோல் நிறுவனங்கள் உள்ள நிலையில், குழப்பத்தைத் தவிர்க்க துல்லியமான சொற்களைப் பயன்படுத்துவது முக்கியம் எனவும் அவர் கூறினார்.

மேலும், இந்தக் கட்டணம் பொழுதுபோக்கிற்காக அந்தச் சாலையைப் பயன்படுத்தும் சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே விதிக்கப்பட வேண்டும். அந்தப் பகுதியில் பணிபுரிபவர்கள், நில உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்பவர்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் அவர் பரிந்துரைத்தார்.

“கெந்திங் ஹைலண்ட்ஸ் மேம்பாட்டாளருக்கு வாகனக் கட்டணத்தினால் ஏற்படும் தாக்கம் என்ன? அவர்கள் அதிகமாக கட்டணம் நிர்ணயித்தால், வருகையாளர்கள் எண்ணிக்கை குறையும் என நான் நினைக்கிறேன். அது அவர்கள் ஏற்க வேண்டிய அபாயம்.

“பயணிகள் இத்தகைய கட்டணம் இல்லாத அல்லது தனியார் சாலைகள் இல்லாத பிற இடங்களுக்கு செல்லலாம். இது எனது தனிப்பட்ட கருத்து, இந்தக் கட்டணம் பணியாளர்களுக்கு விதிக்கப்படக் கூடாது,” என்று அவர் மக்களவையில் நடைபெற்ற 2026 வழங்கல் மசோதாவின் அமைச்சகக் குழு நிலை விவரித்தல் போது கூறினார்.

தனியார் சாலைகளில் வாகனக் கட்டணத்தைப் பற்றிய சட்டம் ஏதும் உள்ளதா எனக் தும்பாட் தொகுதியின் நாடாளுமன்ற

உறுப்பினர் டத்தோ மும்தாஸ் முகமட் நாவி கேட்டபோது, அந்த நிலமும் அதில் அமைக்கப்பட்ட சாலைகளும் மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டவை என்று அஹ்மட் மஸ்லான் விளக்கினார்.

இதற்கு முன்பு, கெந்திங் ஹைலண்ட்ஸ் சாலைக்குள் நுழையும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்க இருப்பதாக கெந்திங் மலேசியா பெர்ஹாட் உறுதிப்படுத்தியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.