கோலாலம்பூர், 18 நவம்பர் — மலேசிய வானிலைத் துறை இன்று மாலை 5 மணி வரை இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று ஏற்படும் என எட்டு மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெர்லிஸ், கெடா, பினாங்கு மற்றும் பேராக்கில் சில பகுதிகள், உலு பேராக், கோல கங்சார் ஆகிய மாநிலங்கள் தற்போது மோசமான வானிலையில் உள்ளது. அதேபோல், கிளந்தான், திரங்கானு மற்றும் பகாங் ஆகிய இடங்களிலும் இதேபோன்ற வானிலை உருவாகும் என முன்னறிவிப்பு அழித்துள்ளது.
இடி மின்னல் எச்சரிக்கை குறுகிய காலத்துக்கானது; ஒரு முறை வெளியிடப்படும் எச்சரிக்கை அதிகபட்சம் ஆறு மணிநேரம் மட்டுமே செல்லுபடியாகும். மேல் விவரங்களுக்கு பொது மக்கள் www.met.gov.my என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தையும், வானிலைத் துறையின் சமூக ஊடக கணக்குகளையும் பின்தொடரவும், myCuaca செயலியைப் பதிவிறக்கம் செய்து, சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களைப் பெறவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.




