குவா மூசாங், நவம்பர் 18 — குவா முசாங்-ஜெலி சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, அச்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று குவா மூசாங் போலிஸ் தலைவர் ஃபூ இதனை கூறினார்.
திங்கட்கிழமை இரவு சுமார் 7.48 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தனது துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. பணியில் இருந்த அதிகாரிகள் பொதுப்பணித் துறை, சாலைப் பராமரிப்பு ஆணையத்திடம் சாலையை மூடி எச்சரிக்கை பலகைகளை நிறுவுமாறு தெரிவித்தனர்.
மண் நகர்வு காரணமாக, சாலையில் ஏற்பட்ட பள்ளம், அனைத்து வாகனங்களும் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் இந்த சம்பவத்தால் எந்தவொரு உயிரிழப்புகளோ அல்லது சேதமோ பதிவாகவில்லை.
சாலை பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கண்காணிப்பு தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.




