கோலாலம்பூர், நவம்பர் 18 — சாலோமா நடைப் பாலம் அருகில் உள்ள கிள்ளான் ஆற்றில் ஏற்பட்ட திடீர் நீரொட்டத்தில் ஒருவன் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறை உறுதிப்படுத்தியுள்ளது.
குழாய் மேம்பாட்டு பணியில் ஈடுபட்டிருந்த அந்த நபர் மாலை 5.30 மணிக்கு பாலம் கீழே நிறுத்தியிருந்த தனது வாகனத்தை நகர்த்த முயன்றபோது நீரொட்டம் திடீரென அதிகரித்ததாக செயல்பாட்டு மையம் தெரிவித்தது. அந்நேரத்தில் பாலத்தின் கீழ் 13 பேர் இருந்தனர்; திடீர் நீரொட்டம் அவர்கள் இருந்த இடத்தை வந்தடைந்தபோது தப்பிச் செல்ல முடியாமல் போனார்கள்.
“ஆனால், அந்த 13 பேரில் 12 பேர், அதாவது மீன்வள பிடிப்பில் இருந்தவர்கள் மற்றும் குழாய் மேம்பாட்டு பணியாளர்கள் மீட்கப்பட்டனர்,” என்று அவர்கள் தெரிவித்தனர். மேலும் காணாமல் போன அந்த நபரைத் தேடும் நடவடிக்கை இரவு 11 மணிக்கு நிறுத்தப்பட்டு, இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் தொடங்கப்பட்டது என்று , டாங் வாங்கி மாவட்ட காவல் துறைத் தலைவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் சம்பந்தப்பட்ட பிற அமைப்புகள் இணைந்து தேடுதல் பணியைத் தொடரும்,” என்று அவர் கூறினார்.




